dinamalar telegram
Advertisement

திருவண்ணாமலை தாமரை குளத்தில் உத்தராயண தீர்த்தவாரி

Share
Tamil News
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்தராயண புண்ணிய கால தீர்த்தவாரி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 5ல், உத்தராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது.இதை தொடர்ந்து, தினமும், காலை, மாலை என இரு வேளைகளிலும், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.இதில் நேற்று காலை, தாமரைக்குளம் கரையில் விநாயகர், சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர், தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.இதை தொடர்ந்து விநாயகர், சந்திரசேகர் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இன்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு இடையே ஏற்படும் ஊடலை நினைவு கூறும் வகையில், திருவூடல் வைபோகத்தை தொடர்ந்து, சுவாமி அம்மன் கிரிவலம் சென்று, மீண்டும் கோவில் திரும்பும்போது மறுவூடல் வைபோகம் நடக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement