dinamalar telegram
Advertisement

சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா

Share
Tamil News
சேலம்: சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, இளைஞர்கள் கத்தி போட்டு பரவசம் அடைந்தனர்.

கொரோனா சூழலால் கட்டுப்பாடுகளுடன், வேம்படி தாளத்தில் நேற்று விழா துவங்கியது. சவுடேஸ்வரியம்மன் கோவிலில் சக்தி அழைப்பு நடந்தது. தொடர்ந்து, பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்து சக்தி அழைக்கப்பட்டு, வீதிகளில் உலா வந்தது.மக்கள் அவரவர் வீடுகளின் முன், தேங்காய், பழம் உடைத்து வழிபாடு நடத்தினர். சுவாமி உலாவுக்கு முன், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிறுவர்கள், கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.அம்மனை அழைக்கும் கோஷத்துடன், சலங்கைகள் கட்டிய கத்திகளை, இரு கைகளில் ஏந்தி, நெஞ்சில் வீசியபடி ஊர்வலமாக வந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement