ADVERTISEMENT
குன்னுார்: குன்னுாரில் நாகம்மன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலை காந்திபுரம், இந்திரா நகரில உள்ள நாகம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, மாலையில் அம்மன் ஊர்வலம் கோவிலில் துவங்கி, லெவல் கிராசிங், மவுன்ட் ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு தந்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி மீண்டும் ஊர்வலம் கோவிலை அடைந்தது.விழாவில் கேரள கலைஞர்களின் மயிலாட்டம் இடம்பெற்றது. மேலும், சிவன், காளி உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்து, கலைஞர்கள் ஊர்வலத்தில் நடனமாடி வந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின், குன்னுாரில் முதலாவதாக நடந்த திருவிழா பக்தர்களை பரவசப்படுத்தியது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!