dinamalar telegram
Advertisement

கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

Share
சென்னை-கடலோர மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, கணிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடலோர மாவட்டங்கள், மற்ற மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில், மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.சென்னையில் நேற்று காலையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. எம்.ஆர்.சி.,நகரில், 1 செ.மீ., மழை பதிவானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்