dinamalar telegram
Advertisement

3 நாட்கள் விடுமுறை எதிரொலி; சரக்கு வாங்க குவிந்த கூட்டம்

Share
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 3 நாள் விடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க குடிபிரியர்கள் குவிந்தனர்.


கடலுார் மாவட்டத்தில் 140 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மதுக் கடைகளில் அதிகளவில் மது பாட்டில்கள் சப்ளை செய்யப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டன. இன்று திருவள்ளுவர் தினம், நாளை முழு ஊரடங்கு, 18ம் தேதி வடலுார் தை பூசம் என 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிபிரியர்கள் நேற்று காலை முதலே மதுபாட்டில்களை மொத்தமாக வாங்க அதிகளவில் படையெடுத்தனர். வெளியூர்களுக்கு செல்வோரும் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.குடிபிரியர்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை சாக்கு பைகளிலும், பெட்டிகளிலும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement