dinamalar telegram
Advertisement

பண்ருட்டி அருகே பெண் தற்கொலை

Share
பண்ருட்டி : பண்ருட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக துாக்குபோட்டு பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பண்ருட்டி அடுத்த அழகுபெருமாள்குப்பம் கிராமம் , பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சுமன்ராஜ், 30; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சிவரஞ்சனி,30; இருவரும் காதலித்து கடந்த 2019 ல் திருமணம் செய்து கொண்டனர். ஒன்றரை வயதில் ஜஸ்வந்த் என்ற மகன் உள்ளார். இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று அதிகாலை 2:00 மணியளவில் சிவரஞ்சனி வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார்.


ஆபத்தான நிலையில் அவரது உறவினர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சிவரஞ்சனி இறந்து விட்டதாக தெரிவித்தார். சிவரஞ்சனியின் தந்தை கந்தசாமி,75; கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் தற்கொலை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement