dinamalar telegram
Advertisement

கார் கவிழ்ந்து விபத்து பெண் டாக்டர் உட்பட இருவர் பலி

Share
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே, நான்கு வழிச் சாலையில் நடந்து சென்றவர் மீது மோதிய கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில், பெண் டாக்டர் உட்பட இருவர் இறந்தனர்.

திருப்பூர், குமார் நகரைச் சேர்ந்த சந்திரமோகன் மனைவி கற்பகம், 48; பல் டாக்டர். இவரது தாய் உமாராணி, 81; தோல் டாக்டர். மகள் கவின்மலர், 20, மருத்துவம் படித்து வருகிறார். மூவரும் நேற்று திருப்பூரில் இருந்து டி.என்.39 பி.பி., 3738 பதிவெண்ணுள்ள 'எட்டியாஸ்' காரில் சென்னை சென்றனர். காரை கற்பகம் ஓட்டினார்.

நேற்று பிற்பகல் 2:40 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் புறவழிச் சாலையை கடந்து பெரிய மாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, நிலை தடுமாறிய கார் சாலையோரம் நடந்து சென்ற பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்கரை, 65, மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டாக்டர் உமாராணி, சக்கரை இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த கற்பகம், கவின்மலர் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement