dinamalar telegram
Advertisement

சுரங்கவியல் பட்டயப் படிப்பு தர வரிசை பட்டியல் வெளியீடு

Share
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சுரங்கவியல் பட்டயப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக் கழக துணைவேந்தர் கதிரேசன் வெளியிட்டார்.


கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து சுரங்கவியல் பட்டயப் படிப்பு நடத்தி வருகிறது.இதற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் வெளியிட்டார். இந்தப் பட்டயப் படிப்பில் பொதுவான 30 இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்கான 30 இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகிய இரண்டையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இணைய தளத்தில் துணைவேந்தர் வெளியிட்டார்.நிகழ்ச்சியில் பல்கலைக் கழக பதிவாளர் சீத்தாராமன் மற்றும் பேராசிரியர் ராம்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement