dinamalar telegram
Advertisement

மயங்கிய மூதாட்டிக்கு கவர்னர் தமிழிசை முதலுதவி

Share
Tamil News
புதுச்சேரி: சென்னையில் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தனது வீட்டின் எதிரே மயங்கி விழுந்த மூதாட்டிக்கு முதலுதவி செய்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் கவர்னர் வீட்டின் எதிரே பைக்கில் அமர்ந்து சென்ற மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்து காயமடைந்தார்.இதனையறிந்த கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், உடனடியாக அந்த மூதாட்டிக்கு முதலுதவி அளித்து, பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். கவர்னரின் துரித நடவடிக்கையை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement