dinamalar telegram
Advertisement

குடிநீர் சுத்திகரிப்பு

Share
புதுச்சேரி : மணவெளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையத்தை சபாநாயகர் திறந்த வைத்தார்.மணவெளி கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி அருகே இயங்கி வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பராமரிப்பின்றி பழுதடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் வசதியின்றி சிரமத்திற்கு உள்ளாகினர்.இதனை அறிந்த தொகுதி எம்.எல்.ஏ.,வான சபாநாயகர் செல்வம் உத்தரவின் பேரில், பழுதடைந்த சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் புனரமைக்கப்பட்டது. அதனை நேற்று மக்களின் பயன்பாட்டிற்கு சபாநாயகர் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் காமராஜ், சுப்ர மணி, கலைவாணன், தங்க துரை, கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement