dinamalar telegram
Advertisement

வில்லியனுார் பகுதியில் ரவுடி வீடுகளில் சோதனை

Share
வில்லியனுார் : வில்லியனுார் பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் ரவுடிகள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 'ஆப்ரேஷன் திரிசூல்' என்ற பெயரில் ரவுடிகளின் நடமாட்டங்கள், அவர்களின் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.வில்லியனுாரில் மேற்கு பகுதி போலீஸ் எஸ்.பி., ரங்கநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் ராஜன், வெடிகுண்டு நிபுணர்குழுவினர்,


மோப்ப நாய் குழுவினர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட போலீசார், கணுவாப்பேட்டை, சாமியார்தோப்பு, புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா, ஊருக்குள் வர தடை செய்யப்பட்ட ரவுடிகள் வீட்டில் உள்ளனரா என சோதனை செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement