dinamalar telegram
Advertisement

மருத்துவ சீட்டுகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

Share
புதுச்சேரி : தமிழ்நாடு, கர்நாடகாவில் உள்ள இந்திய மருத்துவ முறை சீட்டுகளுக்கு புதுச்சேரி மாணவர்கள் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்டாக் அறிவித்துள்ளது.

மத்திய ஆயுஷ் அமைச்சகம் இந்திய மருத்துவ முறை கல்லுாரிகளில் நிரம்பாத 59 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சித்தா (பி.எஸ்.எம்.எஸ்), ேஹாமியோபதி (பி.எச்.எம்.எஸ்.,) யுனானி படிப்புகளில் (பி.யூ.எம்.எஸ்) 5 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களுக்கு புதுச்சேரியில் நீட் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் விண்ணப்பித்த மாணவர்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து சென்னை, இந்திய முறை மருத்துவம் ேஹாமியோபதி இயக்குனரக இணையதளத்தில் வரும் 18ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப்படிவ நகலை சென்டாக் அலுவ லகத்திற்கு 19ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். தமிழ்நாடு இந்திய மருத்துவ முறை கல்லுாரியில் யுனானி-1 சீட், மதுரை திருமங்கலம் கல்லுாரி ேஹாமியோபதி படிப் பில்-1, பெங்களூரு கல்லுாரி ேஹமியோபதி-1, பாளையங்கோட்டை மருத்துவ கல்லுாரி சித்தா 2 சீட் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement