புதுச்சேரி பல்கலைக்கழக பெண் ஊழியர் தற்கொலை
புதுச்சேரி : கடன் தொல்லையால் புதுச்சேரி பல்கலைக்கழக பெண் ஊழியர், எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, பிள்ளைச்சாவடி திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லதா, 48; புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர். கணவர் இறந்துவிட்டார். இவரது மூத்த மகள் பிரியங்கா, 28; இளைய மகன் ராகுல், 27.கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகளுக்கு கர்ப்பப் பையில் கட்டி ஏற்பட்டதால், தன்னிடம் வைத்திருந்த நகைகளை விற்று மருத்துவம் பார்த்தார். சிகிச்சைக்கு மேலும் பணம் தேவைப்பட்டதால், பலரிடம் கடன் வாங்கி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
கடன் கொடுத்தவர்கள் லதாவிடம் பணத்தை திருப்பி கேட்டனர். பணத்தை கொடுக்க முடியாமல், லதா சிரமப்பட்டு வந்தார். இதனால் மன உலைச்சலில் இருந்த லதா, கடந்த 11ம் தேதி வீட்டில் எலிபேஸ்ட் சாப்பிட்டுள்ளார். டிரைவர் வேலைக்கு சென்று மதியம் 3:00 மணிக்கு திரும்பிய மகன் ராகுல், வீட்டில் மயங்கி கிடந்த தாய் லதாவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!