dinamalar telegram
Advertisement

அட்மா திட்ட குழு ஆலோசனைக் கூட்டம்

Share
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி வேளாண்துறை சார்பில் அட்மா திட்ட குழுவின் புதிய நிர்வாகிகளின் முதல் ஆலோசனை கூட்டம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.அட்மா திட்ட குழு தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வேளாண் துணை இயக்குனர் பிரேம் சாந்தி, உதவி இயக்குனர் பூவராகவன், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி நடராஜன் முன்னிலை வகித்தனர்.

இணை இயக்குனர் (பொறுப்பு) கென்னடி சிவக்குமார் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கி பேசினார்.இதில் 25 அட்மா குழு உறுப்பினர்களுக்கு மாடி தோட்டம் அமைக்கத் தேவையான தொகுப்பு, விதைகள் உள்ளிட்டவற்றை அட்மா குழு தலைவர் சிவகுமார்வழங்கினார்.தோட்டக்கலை உதவி இயக்குனர் சங்கீதா, வேளாண் அலுவலர் அனுசுயா, உதவி வேளாண் அலுவலர்கள் வெங்கடேசன், மனோஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement