dinamalar telegram
Advertisement

சில்வர் பீச்சில் பொதுமக்களுக்கு தடை

Share
Tamil News
கடலுார் : கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொங்கல் கூட்டத்தை தவிர்க்க, கடலுார் சில்வர் பீச்சில் பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகை நேற்று துவங்கிய நிலையில், இன்று (15ம் தேதி) மாட்டு பொங்கல், அடுத்து உழவர் நாள் என, ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா வரையில் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க, கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வழியில் தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சில்வர் பீச்சிற்கு வரும் பொது மக்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement