dinamalar telegram
Advertisement

கோவில் வாசலில் பக்தர்கள் தரிசனம்

Share
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கோவில்கள் வாசலில் சூடமேற்றி, தேங்காய் உடைத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் புத்தாடை அணிந்து, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், மணவாள நல்லுார் கொளஞ்சியப்பர் கோவில்களுக்கு தரிசனத்துக்கு வருவது வழக்கம்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பொங்கல் பண்டிகை நாட்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.விருத்தகிரீஸ்வரர், கொளஞ்சியப்பர் கோவில்களின் வாசலில் சூடமேற்றி, தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், வேடப்பர் கோவில்களிலும் பக்தர்கள் வாசலில் தரிசனம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement