dinamalar telegram
Advertisement

அலங்கார பொருள் விற்பனை ஜோர்

Share
கடலுார் : கடலுாரில் மாட்டுப் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனை விறு விறுப்பாக நடந்தது.

விவசாயத்திற்கு துணை நிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது.கடலுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கலை கொண்டாட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். மாடுகளுக்கு தேவையான கழுத்து கயிறு, கொம்பு கயிறு, கழுத்தில் அணியும் மணிகள், சலங்கை, புதிய மூக்கணாங்கயிறு உள்ளிட்டவற்றை கும்பகோணம், சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டு கடலுார் நகர கடைவீதிகளில் நேற்று விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement