dinamalar telegram
Advertisement

கரும்பு விற்பனை மந்தம்; விவசாயிகள் கவலை

Share
புவனகிரி : பொங்கலன்று கரும்புக்கு போதிய விலை இல்லாததால் கரும்பு விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்தனர்.

தமிழக அரசு விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பண்டிகைக்கு இலவசமாக வழங்கியதால் புவனகிரி, சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி தாலுகா பகுதியில் அதிகளவு கரும்பு சாகுடி செய்தனர். ஆனால் அரசு அதிகளவில் கொள்முதல் செய்யவில்லை. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்தனர்.விவசாயிகளும் வெட்டிய கரும்பை விற்றால் போதும் என ஜோடி கரும்பை வயலில் அதிகபட்சமாக ரூ.20 க்கும், வியாபாரிகள் கடை வீதியில் ரூ.30க்கும் விற்றனர்.


இருப்பினும் பொதுமக்கள் வாங்காததால் விற்பனையில் தேக்க நிலை நேற்றும் நீடித்தது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் இந்த ஆண்டு கரும்பு சாகுடியில் பெருத்த நஷ்டத்தை சந்தித்தனர். கடந்த ஆண்டு புவனகிரியில் போலீஸ் பாதுகாப்புடன் கருப்பு ஜோடி அதிகளவாக ரூ.150 முதல் 200 வரை விற்றது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement