கூட்டுறவு வங்கி தலைவருக்கு விருது
கிள்ளை : சமூக சேவையை பாராட்டி, பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வேணுகோபாலுக்கு, சேவா ரத்னா விருதை, ஐகோர்ட் நீதிபதி கிருஷ்ணன் வழங்கினார்.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் என்ற வேணுகோபால். இவர், கூட்டுறவு துறை மற்றும் சி.கொத்தங்குடி ஊராட்சி தலைவர் பதவி மூலம் பொதுமக்களுக்கு, பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.இவரது சேவையை பாராட்டி, சென்னை மகா பைன் ஆர்ட்ஸ் சார்பில், சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.சென்னையில் நடந்த விழாவில், ஐகோர்ட் நீதிபதி கிருஷ்ணன், பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வேணுகோபாலுக்கு, சேவா ரத்னா விருதை வழங்கினார். விருதுப்பெற்ற வேணுகோபாலுக்கு, கூட்டுறவு சங்க ஊழியர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!