dinamalar telegram
Advertisement

மருமகள் நகைகளை மாமியார் வைத்திருப்பது குற்றமாகாது: உச்ச நீதிமன்றம்

Share
புதுடில்லி-'பாதுகாப்பு காரணங்களுக்காக மருமகளின் நகைகளை மாமியார், மாமனார் வைத்திருப்பதை குற்றமாக கருத முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது:என்னை என் கணவர், மாமனார், மாமியார், மைத்துனர் மிகவும் கொடுமைப் படுத்துகின்றனர். பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறி, என் நகைகளை மாமனாரும், மாமியாரும் பறித்து விட்டனர். தன் பெற்றோரை என் கணவர் ஒரு நாளும் கண்டித்தது இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து பெண்ணின் கணவன், மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே பெண்ணின் கணவர், அமெரிக்காவில் பணியாற்றுவதால் தன்னை அமெரிக்கா செல்ல அனுமதிக்கும்படி போலீசாரிடம் கோரினார். இதற்கு போலீசார் மறுத்தனர்.இதையடுத்து பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் அமெரிக்கா செல்ல அனுமதிக்க கோரி, பெண்ணின் கணவர் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, மகேஸ்வரி ஆகியோர் அளித்த தீர்ப்பு:பாதுகாப்பு காரணங்களுக்காக மருமகளின் நகைகளை மாமியார், மாமனார் வைத்திருப்பதை குற்றமாக கருத முடியாது. மேலும் நகைகளின் விபரங்களையும், புகார் கொடுத்த பெண் தெரிவிக்கவில்லை. பெற்றோர், சகோதரர் செய்த தவறுகளுக்காக ஒருவரை குற்றவாளியாக்க முடியாது. அதனால் இந்த வழக்கில் மனுதாரருக்கு அமெரிக்கா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தவறு.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

  • Krishnan - Coimbatore ,இந்தியா

    பாலியல் கேஸ்க்கு ஒரு உருப்படியான தீர்ப்பு கிடையாது, இது ஒரு வெட்டி வேலைய தீர்ப்பு, சட்டத்தில பெரிய O இருக்கு.

  • R.SANKARA RAMAN - chennai,இந்தியா

    இந்த நகை விஷயத்திற்கும் அந்தப் பெண்மணி அமரிக்கா போவதற்கும் என்ன சம்பந்தம். அதற்கு காவல் துறை அனுமதி எதற்கு?

  • Tamilan - NA,இந்தியா

    ....

  • அறவோன் - Chennai,இந்தியா

    .பத்திரிக்கை செய்திகள், நீதிமன்றத்தில் நடப்பவைதான் தொலைக்காட்சி தொடர்களாகின்றன.

  • அறவோன் - Chennai,இந்தியா

    எந்த ஒரு திருமணத்தின் போதும் பெண் வீட்டார் தங்கள் பெண்ணிற்கு இவ்வளவு சவரன் நகை போட்டோம் என்று எழுதிக்கொடுத்த வரலாறில்லை. மாப்பிள்ளை கசந்தவுடன் பொய் கூறும் படலம் அரங்கேற்ற படும்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்