dinamalar telegram
Advertisement

ரயில் விபத்துக்கு காரணம் என்ன?

Share
ஜல்பைகுரி-ரயில் விபத்துக்குள்ளான இடத்தை நேற்று நேரில் ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அந்த ரயில் இன்ஜினில் கோளாறு இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அசாமின் கவுஹாத்தி - ராஜஸ்தானின் பிகானீர்இடையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு வங்கத்தின் வழியாக நேற்றுமுன்தினம் சென்றது.இங்குள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் சென்றபோது அந்த ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஐந்து பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர்; 36 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ரயில் இன்ஜினின் உபகரணங்கள் பிரிக்கப்பட்டு, அவற்றை ஆய்வு செய்த பின் தான், விபத்து நேர்ந்ததற்கான சரியான காரணம் என்ன என்பது தெரியவரும். அந்த இன்ஜினில் தான் ஏதோ ஒரு கோளாறு உள்ளதாக தெரிகிறது.

வேகக் கட்டுப்பாடு மற்றும் ரயில் தண்டவாளத்தின் காரணமாகவோ இந்தவிபத்து ஏற்படவில்லை. அதை என்னால் உறுதியாக கூற முடியும். இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை குழு விசாரித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Tamilan - NA,இந்தியா

    ...

  • venkatan - Puducherry,இந்தியா

    உணவு, தண்ணீரின் தர்ம சாஸ்திரத்தின் கோட்பாடுகளுக்கு இசைய இவைகளை க் காசுக்கு விற்கக்க்கூடாது.. 'சுத்திகரிக்கப்பட்ட மக்களின் குடிநீர்'என்று கலன்கள் இல்லாமல் தானியங்கு இயந்திரங்கள் மூலம் வழ ங்க லாமே

Advertisement