dinamalar telegram
Advertisement

முல்லைப்பெரியாறு அணையில் 2 நாட்களாக தண்ணீர் நிறுத்தம்: கிராமங்களில் குடிநீருக்கு சிக்கல்

Share
Tamil News
கூடலூர்-முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2 நாட்களாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் கூடலூர் அருகே கிராமங்களில் குடிநீர் சப்ளையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.லோயர்கேம்ப் குறுவனத்துப்பாலம் அருகே மின் வாரியம் சார்பில் முல்லைப் பெரியாற்றில் சர்வே பணி நடப்பதால் 2 நாட்களாக அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு திறந்து விடப்பட்டிருந்த 1200 கனஅடி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இது மட்டுமன்றி குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி ஆகிய கிராமங்களில் ஆற்றில் நேரடியாக பம்பிங் செய்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றி 2 நாட்களாக திடீரென அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால் கிராமங்களில் பம்பிங் செய்து குடிநீர் சப்ளை முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வே பணி முடிந்து நாளை (இன்று) பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என மின் வாரியத்தினர் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement