dinamalar telegram
Advertisement

வேளாண் பட்டதாரிகளுக்கு மானியம்

Share
தேனி-தேனி மாவட்டத்தில் வேளாண் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்ற மானியம் வழங்கப்படுகிறது.இதில் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் 40 ஊராட்சிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் அமலாகும் 8 ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் இதில் பயன்பெறலாம். இவர்கள் 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அக்ரி கிளினிக் அமைக்க நிலம், மரச்சாமான்கள் தவிர்த்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள இத்திட்டத்தில் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், பசுமைக்குடில் அமைத்தல், வேளாண் உபகரணங்களுக்கான வாடகை மையம், விதை, உரம், பூச்சிகொல்லி மருந்து மையங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்கும் மானியம் வழங்கப்படும். விரும்புவோர் பட்டப் படிப்பு சான்று, ஆதார், ரேஷன் கார்டு, வங்கி புத்தகம் நகல்களை ஜன.,25க்குள் தேனி வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement