dinamalar telegram
Advertisement

முன்மாதிரி ஊராட்சிகளில் மேலாண்மை நிகழ்ச்சி

Share
பெரியகுளம் -திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத முன்மாதிரி ஊராட்சிகளாக லட்சுமிபுரம், அழகர் நாயக்கன்பட்டி தேர்வு செய்யப்பட்டது.பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் முன்மாதிரி ஊராட்சியாக லட்சுமிபுரம், அழகர் நாயக்கம்பட்டி தேர்வு செய்யப்பட்டது. இந்த ஊராட்சிகளில் மேம்பாட்டிற்கு முதல்கட்ட நடவடிக்கையாக அடிப்படை கணக்கெடுப்பு, சமூக வரைபடம் தயாரிக்கும் பணி நடந்தது. இதனைத் தொடர்ந்து முன்மாதிரி கிராம ஊராட்சி ஆக உருவாக்குதல் திட, திரவ கழிவு மேலாண்மை நிகழ்ச்சி லட்சுமிபுரத்தில் நடந்தது. லட்சுமிபுரம் ஊராட்சி தலைவர் ஜெயமணி தலைமை வகித்தார்.அழகர் நாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் கோட்டை அம்மாள், தேனி உதவி இயக்குனர் (தணிக்கை) மகேந்திரன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., ஜெகதீசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்திக், சாந்தி, ஊராட்சி செயலர்கள் பாண்டியராஜன், நந்தினி பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement