dinamalar telegram
Advertisement

புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

Share
ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி - முத்துகிருஷ்ணாபுரம் ரோட்டில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முத்துகிருஷ்ணாபுரம் ரோட்டில் பத்திரப்பதிவு, சர்வேயர் அலுவலகங்கள், மதுபோதை பாதிப்பு மறுவாழ்வு மையம் மற்றும் மீனாட்சி நகர், சத்யாநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. காலை, மாலையில் பெண்கள், முதியோர்கள் உட்பட பலரும் இந்த ரோட்டில் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். இப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடம் தேர்வு செய்து கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாத டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் புதிய கடை அமைக்கும் பணியை தொடர்கிறது. டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இ.கம்யூ., கட்சி கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement