dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: தரமான குடிநீர் கிடைக்குமா?

Share

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்வி.எஸ்.கோபாலன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கிய, 'அம்மா குடிநீர்' திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனளித்தது. அனைத்து பேருந்து நிலையங்களிலும், 10 ரூபாய்க்கு குடிநீர் பாட்டில் விற்பனையானது.

இதனால் தனியார் குடிநீர் பாட்டில்களின் விலையும் உயராமல் இருந்தது.தற்போது அரசியல் காரணத்திற்காக, அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 'அம்மா குடிநீர்' பாட்டில்கள் எங்கும் கிடைக்கவில்லை. பேருந்து நிலையத்தில், குடிநீர் விற்ற மையம் எல்லாம் பூட்டிக் கிடக்கின்றன.மேலும் பெரும்பாலான பேருந்து நிலையங்களில், பல்வேறு தனியார் தயாரிப்பு நிறுவனங்கள் பெயரில் கிடைக்கும் குடிநீர் 1 லிட்டர், 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதனால் பெரும்பாலான பயணியர், தங்கள் வீட்டிலிருந்தே குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வருகின்றனர்.ரயில் நிலையங்களில் இயந்திரம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், 10 ரூபாய்க்கு கிடைக்கிறது. அது போல, பேருந்து நிலையங்களிலும் குடிநீர் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
.'அம்மா' என்ற பெயர், தி.மு.க., அரசுக்கு பிடிக்கவில்லை என்றால், என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டி கொள்ளட்டும்; மக்களுக்கு தரமான குடிநீர் கிடைத்தால் போதும்.பேருந்து நிலையத்தில் தரமான உணவகம், சுகாதாரமான கழிப்பறை, சுத்தமான குடிநீர் கிடைத்தால், அது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  தரமான குடிநீர் கிடைக்குமா? கொஞ்சம் பொறுங்கள். மக்களின் வரிப்பணத்தில், கோடிக்கணக்கில் கூவம் ஆற்றை நமது மாண்புமிகு, தமிழ் படிக்கவராத முதல்வர் சுத்தம் செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார். கூவம் சுத்தம் செய்யப்பட்டவுடன், நீங்கள் கேட்ட தரமான குடிநீர் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். பொறுமை அவசியம். அதுவரை, இருக்கவே இருக்கிறது - தரமான டாஸ்மாக் 'குடிநீர்' அதை குடித்து, உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து கொள்ளுங்கள்.

 • ஆரூர் ரங் -

 • ஆரூர் ரங் -

  சென்னைக்கு ஜோலார்பேட்டையிலிருந்து குடிநீர் கொடுக்க கூடாதுன்னு போராடின மஹாத்மா 🤔துரைமுருகன் இருக்கும் கட்சி கிட்ட இதனை எதிர்பார்க்கக் கூடாது. அவங்களால முடிஞ்சது. சென்னைக்கு காவிரி குடிநீர் என வீராணம் திட்டம்😉☺ போட்டு காவிரித்தாய்க்கு சென்னையில் சிமெண்ட் சிலை வைத்து விழா கொண்டாட்டம் மட்டுமே. முடிவில் 😪தண்ணீரும் வரவில்லை. காவிரித்தாய் சிலை இப்போது இருக்குமிடமும் தெரியவில்லை . வீராணம் ஊழல் குழாய்கள் இன்னும் சாட்சிகளாக . இப்போ மாறன் வீட்டில்😁 மட்டுமே காவிரி உண்டு

 • raja - Cotonou,பெனின்

  இந்த ஆச்சில தானே செஞ்சிட்டு தான் மறு வேலை பாப்பானுவோ...... அனுபவிங்க மக்கா.. கேவலம் ரூவா 200க்கும் ஓசி குவார்ட்டரு பிச்சை பிரியாணி தள்ளுபடி இலவசத்துக்கு ஆசைப்பட்டு ஓட்ட போட்டீங்கல்ல... இப்போ அனுபவிங்க....இன்னும் நாலு வருசத்துல உங்க கோவணத்தை உருவாம விடமாட்டானுவோ இந்த ஆச்சியாளனுங்க........

 • GMM - KA,இந்தியா

  ஊராட்சி, நகராட்சி வரி வசூல் சுத்தமான இலவச குடிநீர் விநியோகம் மற்றும் பொது சுகாதாரம் பராமரித்தல் செலவுக்கு தான். நடைமுறையில் நிர்வாக செலவுகள், ஆடம்பர மீட்டிங், ஊழல் மலிந்த பின் இவை சாத்தியம் அல்ல. தெருவில் சேரும் குப்பைகளை மாட்டு வண்டி மூலம் ஊர் மக்கள் சேகரித்து குப்பை கிடங்கில் சேர்க்கலாம். அரசு கழிவுகளை அகற்ற வேண்டும். கழிவு நீரை சுத்திகரிக்க வேண்டும். தெருவை ஆக்கிரமிக்கும் படிகளை வீட்டின் எல்லையில் வைக்கலாம். அரசு குடிநீரை 1லி முதல் 20 லி கேன் வரை குறைந்த செலவில் விற்கலாம். தனியார் குடிநீர் விற்பனைக்கு தடை. பேருந்து நிலையத்தில் இருக்கும் தனியார் (கட்சி) கடைகளை அகற்றி விட்டு, காவல், தபால், கிளினிக், மருந்தகம், atm, ஹோட்டல் தமிழ்நாடு, ஆவின் போன்ற மக்களுக்கு அதிகம் பயன் தரும் பொது சேவை நிலையங்களுக்கு இலவசமாக இடம் தரலாம். அரசியல்வாதிகள் வியாபாரம் செய்வதை தேர்தல் ஆணையம் தடுக்க முடியும். மக்கள் பிரதிநிதிகள் சொத்து அவர்கள் காலத்திற்கு பின் அரசுடமை ஆக்க வேண்டும். இது அரசு உயர் அதிகாரிகளுக்கும் பொருந்த வேண்டும். CISF மூலம் தொழில் நிறுவனங்கள் (ரவுடிகள் பிடியில் இருந்து) காக்க வேண்டும். இது நிகழ திராவிட மாயை தமிழக்கத்தில் இருந்து அகல வேண்டும்.

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

   .....

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்