dinamalar telegram
Advertisement

ஹிந்துக்கள் 3 குழந்தைகள் பெற வேண்டும் விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்

Share
போபால், ஜன. 15-'ஹிந்துக்களின் மக்கள் தொகை குறையாமல் தடுக்க வேண்டுமானால், அவர்கள் குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்' என, வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் கண்ட்வாவில் வி.எச்.பி., மற்றும் பஜ்ரங்தள் சார்பில் ஹிந்து இளைஞர்கள் மாநாடு நடந்தது. இதில் வி.எச்.பி., மூத்த தலைவர் மிலிந்த் பராண்டே பேசியதாவது:நாட்டின் மக்கள் தொகையில் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மதமாற்ற நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. இதை தடுக்க வேண்டும்.
இல்லாவிடில் இன்னும் 50 ஆண்டுகளில் ஹிந்துக்கள் சிறுபான்மை மக்களாகி விடுவர். இது நாட்டுக்கே ஆபத்தாகிவிடும். இந்தியா மீண்டும் அந்நியரிடம் அடிமைப்படும் அபாயத்தை தடுக்க வேண்டும். அதனால் ஹிந்து சமூகத்தை பாதுகாக்க, ஹிந்து இளைஞர்கள் அனைவரும் திருமணத்துக்கு பின், குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஹிந்துக்களிடம் ஒற்றுமை இல்லாததால் தான், நாடு முதலில் முஸ்லிம்களிடமும், பின் ஆங்கிலேயர்களிடமும் அடிமைப்பட்டது.

ஆங்கிலேயர் வருவதற்கு முன் நம் நாடு கல்வியறிவில் சிறந்து விளங்கியது. இதை சீரழிக்கும் நோக்கில் தான் 'மெக்காலே' கல்வி திட்டத்தை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். இதன் வாயிலாக நம் முன்னோர்களை அறிவில்லாதவர்கள், ஒன்றும் தெரியாதவர்கள் என, நம்மிடம் ஆங்கிலேயர்கள் போதித்தனர். மெக்காலே கல்வி திட்டத்தை, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மாற்றியமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (49)

 • Navinkumar - Seattle,யூ.எஸ்.ஏ

  அதற்கு பதிலாக எல்லாரும் ஒரு குழந்தை என்ற சட்டம் வரவேண்டும். இயற்கை அழிந்து கொண்டு இருக்கின்றது மேலும் மக்களின் மகிழ்ச்சை கெடுகிறது, அதற்கு கரணம் மக்கள் தொகை. மக்கள் தொகை எற எற போட்டி பொறாமை கொலை கொள்ளை போன்ற அணைத்து குற்றங்களும் அதிகரிக்கும். எனவே அணைத்து மதத்தினரும் ஒரு கொழந்தை என்ற கொள்கை வேண்டும்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  2000 ஆம் ஆண்டுக்கு பிறகு ஹிந்துக்களில் குறிப்பாக படித்தவர்கள், செல்வந்தர்கள், ஓரளவுக்கு வசதியாக இருப்பவர்கள் பெரும்பாலோர் ஒரேயொரு குழந்தையோடு நிறுத்திக்கொள்கிறார்கள். அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் அவ்ளோதான். 95 சதவிகிதத்தினர் மூன்றாவது குழந்தை பெறுவதில்லை. கிட்டத்தட்ட மதம் மாறிய கிறிஸ்தவர்களும் அதே மனநிலையில்தான் வசிக்கிறார்கள். இப்பதான் இந்திய அரசு தலாக் சிஸ்டத்துக்கும் ஆப்படித்ததது. இவ்ளோ நாள் ஒன்னு ரெண்டு மூணு நாலு தலாக் தலாக் தலாக் மறுபடி ஒன்னு ரெண்டு மூணு நாலு தலாக் தலாக் தலாக், மறுபடி ஒன்னு ரெண்டு ...........ன்னு இருந்தது. தெற்கில் இதுபோல அதிகம் இல்லாவிட்டாலும் வடக்கிலிந்த அக்கப்போர் அதிகம்.

 • S.J.ANANTH - Nagercoil,இந்தியா

  கோசாலையில் உள்ள மாட்டை காப்பாத்த வழிய பாருங்கோ

 • Krishnan - Coimbatore ,இந்தியா

  VHP க்கு வேற வேலையில்லாம் இல்லப்பா, இனிஒரு கோவிட் லாக்டவுன் கொடுங்கப்பா மூணு என்ன.......

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  மிக பெரும்பான்மையாக..குறிப்பாக வேறு மதத்தவர்கள் இல்லாமல், ஹிந்துக்கள் மட்டுமே இருந்த போதுதான்...கஜினி முதல் பாபர் வரை படை எடுத்து வந்து அடிமை படுத்தினார்கள்..பிறகு..ஆங்கிலேயர், பிரெஞ்சு காரர்கள் அடிமை படுத்தினார்கள்... இந்துக்களின் மக்கள் தொகைக்கும் .. அடிமை படுவதற்கும் சம்பந்தம் இல்லை .. இவரின் பேச்சில் வழக்கம் போல மூடத்தனம் தான் தெரிகிறது

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்