dinamalar telegram
Advertisement

வாட்ஸ் ஆப்பில் சேவை மும்பையில் அறிமுகம்

Share
மும்பை-மும்பையில் 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக மக்களுக்கு சேவைகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மும்பை மாநகராட்சி சார்பில் மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் மும்பை மக்களுக்கு வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக சேவைகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது உத்தவ் தாக்கரே பேசியதாவது: தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும் என்பதை நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக மக்களுக்கு 80க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கும் முதல் மாநகராட்சியாக மும்பை மாநகராட்சி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • raja - Cotonou,பெனின்

    ரொம்ப நல்லதா போச்சி..... இனிமே மும்பை மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் என்பத்தை பெருமையுடன் சொல்லறாரு உத்தவ்...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நாலு உள்நாட்டு நிறுவனங்களுக்கு வேலை கொடுத்து தனிப்பட்ட செயலியை தயாரிப்பதை விட்டுவிட்டு மார்க்கு ஸக்கர்பர்க்குக்கு இலவசமாக தகவல் கொடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்