dinamalar telegram
Advertisement

குறைதீர்க்க ஆன்லைன் தளம் : அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

Share
புதுடில்லி :ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோர் குறை தீர்க்க, 'ஆன்லைன்' சிறப்பு தளம் உருவாக்கப்பட்டு உள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் கூறியதாவது:முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்க்க 'ரக் ஷா பென்ஷன் ஷிகாயத் நிவாரன்' என, பெயரிட்ட ஆன்லைன் சிறப்பு தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.இதன் வாயிலாக அனைவரும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறையிடம் நேரடியாக குறைகளை தெரிவித்து உடனடி தீர்வு பெறலாம்.விண்ணப்பங்களின் பதிவு எண், அவற்றின் நிலை குறித்த தகவல், விண்ணப்பதாரர்களின் அலைபேசி, 'இ மெயில்' முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

    7 வருஷம் கழித்து தேர்தலுக்காக இப்போதான் கண் முழிக்கின்றீர்களா?

  • Prakash - Chennai,இந்தியா

    Service benefits are not subjected to Hindu Succession law as per dept rules. However because of greedy in laws and vested legal employees the genuine benefits are refused to the nominee made by the employee. In laws think that just because their name appears in legal heir certificate they are eligible to claim a share. Dept should not ask legal heir certificate when proper nomination is made by employee. In this Covid time young childless widows are being harassed by in laws. Dept delays payment of pension gratuity to the employees widow indefinitely just because in laws object.

  • natesa -

    he understood now, about dravidian model.

  • அப்புசாமி -

    அவிங்க குறையெல்லாம் எல்லோருக்கும் பணி நீட்டிப்பு செஞ்சு குடுக்கணும்னு கேள்வி. ஒரு குறிப்பிட்ட கெழ போல்ட்டுகளுக்கு மட்டும் பணி நீட்டிப்பு குடுக்கறது அநியாயம்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்