dinamalar telegram
Advertisement

ஒட்டன்சத்திரத்தில் ரூ.1.16 கோடி திருமண நிதி உதவி : அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்

Share
ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரத்தில் 146 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி திருமண நிதி உதவிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.ஒட்டன்சத்திரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு நிதி உதவியுடன் 8 கிராம் தங்கம் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். வேலுச்சாமி எம்.பி., முன்னிலை வகித்தார். காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட சமூக அலுவலர் புஷ்பகலா, தாசில்தார் முத்துச்சாமி, ஒன்றிய தலைவர் அய்யம்மாள், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ் பங்கேற்றனர்.அமைச்சர் சக்ரபாணி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்ற நோக்கில் திருமண நிதி திட்டத்தின் கீழ் பட்டம் பெற்ற பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம் நிதி, 10, 12 மற்றும் பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு 8 கிராம் தங்கம், ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்திற்க இந்தாண்டு ரூ.13.22 கோடி மதிப்பில், தலா 8 கிராம் எடையுள்ள, 3500 தங்க நாணயங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement