dinamalar telegram
Advertisement

நாடகமாடுகிறார் பிரியங்கா பா.ஜ., சரமாரி குற்றச்சாட்டு

Share
புதுடில்லி:பெண்களின் போராளியாக தன்னை காட்டிக் கொள்ள காங்., பொதுச் செயலர் பிரியங்கா நாடகமாடுகிறார் என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.
பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:பெண்களின் உரிமைகள், பாதுகாப்புகாக போராடுபவராக தன்னை காட்டிக் கொள்ள பிரியங்கா நாடகமாடுகிறார்.பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான சிறிய வன்முறை நடந்தாலும், அங்கு ஓடிச்சென்று அவர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் பிரியங்காவும், அவரது சகோதரரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான எந்த வன்முறை நடந்தாலும் கண்டும் காணாதது போல் இருக்கிறார்.ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி, மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவரை பார்க்கக் கூட பிரியங்கா செல்லவில்லை.
இது பற்றி புகார் மனு கொடுக்க வந்தோரையும் சந்திக்க மறுத்து காங்கிரஸ் தொண்டர்களுடன் பிரியங்கா தன் பிறந்தநாளை கொண்டாடினார்.பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெண்களின் போராளியாக காட்டிக் கொள்பவர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (25)

  • Suppan - Mumbai,இந்தியா

    நாங்கள் ஆளும் மாநிலங்களில் கற்பழிப்பெல்லாம் நடக்காது. சின்ன பசங்க சித்தே அப்படி இப்படின்னு இருப்பாங்க. அதெல்லாம் சும்மா விளையாட்டுதான். முலாயம் சிங் அப்படித்தானே சொன்னாரு. அதுக்கு ஒரு குதி கூட குதிக்கலயே நீங்க. இதெல்லாம் போய் அரசியல் பண்ணிக்கிட்டு. அப்பால போங்க. எங்க இளவரசி வராங்க.

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    அழிந்து போன கட்சி

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    மத வெறியும் , சாதி வெறியும், பண வெறியும் , பதவி வெறியும் இவைகள்தான் மனிதனை கொல்லும்.

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    மதவெறியும் , சாதிவெறியும், பணவெறியும் , பதவிவெறியும் இவைகள்தான் மனிதனை கொல்லும்.

  • பேசும் தமிழன் -

    பப்பு வின் பருப்பு வேகவில்லை.... இந்த ராபர்ட் வாத்ரா குடும்ப பெண்ணை... காந்தி என்று பெயரை மாற்றி கூட்டி கொண்டு வந்து உள்ளனர்... மக்களுக்கு எல்ல்லாம் தெரிந்து விட்டது.... இனியும் மக்களை ஏமாற்ற முடியாது

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்