dinamalar telegram
Advertisement

நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க, என்.எம்.எம்.எஸ்., அலைபேசி கண்காணிப்பு

Share
திண்டுக்கல் :நுாறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க, திண்டுக்கல் மாவட்டத்தில் 'என்.எம்.எம்.எஸ்.,' அலைபேசி செயலி வாயிலாக தொழிலாளர்களின் வருகை கண்காணிக்கப்படுகிறது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நுாறு நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 18 வயதிற்கு மேல் வேலைக்கு ஏற்ற உடல் திறன் கொண்ட அனைவரும் தகுதி உடையவர்கள். அதே ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் மரக்கன்று நடவு செய்தல், நீர் வழித்தடங்களை துார்வாருதல், உறிஞ்சு குழி, பண்ணை குட்டை, மண் வரப்பு அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் வழங்கப்படுகிறது.சில ஊராட்சிகளில் செய்யாத வேலைக்கு பணம் கொடுப்பது, வேலைக்கு வராமல் கூலி எடுப்பது, குறைந்த வேலைக்கு அதிக வேலை செய்ததாக கணக்கு காண்பிப்பது போன்ற முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தன. இதை தடுக்க, பணிக்கு வரும் கூலி தொழிலாளர்களின் வருகையை தினமும் காலை, மதியம் அலைபேசி செயலி வாயிலாக பதிவு செய்ய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, வேலையாட்களின் வருகை 'NMMS' செயலி மூலம் பதிவு செய்யப்படுகிறது.திட்ட இயக்குனர் தினேஷ்குமார் கூறுகையில், ''தினமும் காலை பணிக்கு வந்ததும், மதியம் உணவு இடைவேளைக்கு பின் என இரண்டு வேளையும் வருகைப் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும்'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement