dinamalar telegram
Advertisement

திண்டுக்கல் கோயில்களில் பொங்கல் சிறப்பு பூஜை

Share
திண்டுக்கல் ;கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்களின்றி திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பொங்கல் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமியம்மன், வெள்ளை விநாயகர், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், பத்ரகாளியம்மன், ரயிலடி சித்தி விநாயகர், போடிநாயக்கன்பட்டி காளியம்மன், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, நேருஜி நகர் நவசக்தி, சத்திரம் தெரு செல்வ விநாயகர், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில்களில் பொங்கலை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.கொரோனா ஊரடங்கால் ஜன.14 முதல் ஜன.18 வரை ஐந்து நாட்களுக்கு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று கோயில் நுழைவு வாயிலில் நின்றபடி சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்கள் புத்தாடை அணிந்து சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடுகளுக்கு முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் பலர் வாசலில் நின்று வழிபட்டு சென்றனர். கிராமங்களில் வயல்வெளிகளில் இருந்த குல தெய்வ கோயில்களில் அதிகளவு கெடுபிடி இல்லாததால், கிராமத்தினர் அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதேபோல் பல கிராமங்களில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு, மலர் அலங்காரத்துடன் ஆராதனைகள் நடந்தது. அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயில், கொத்தபுள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement