Load Image
dinamalar telegram
Advertisement

பணம் பெற்றும் இணைப்பு வழங்காத மின் அதிகாரிகள்

வத்தலக்குண்டு, ;வத்தலக்குண்டு அருகே விவசாயி ஒருவர் மின் இணைப்புக்காக பணம் கட்டியும், இணைப்பு வழங்க இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.கோ. காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி 63. இவர் தனது நிலத்திற்கு மின் இணைப்பு பெற வத்தலக்குண்டு துணைமின் நிலைய அலுவலகத்தில் ரூ.13 ஆயிரம் கொடுத்துள்ளார். அவ்வப்போது ஆய்வுக்காக வரும் அலுவலர்களிடமும் பணம் கொடுத்துள்ளார். இப்படியாக ரூ.ஒரு லட்சம் வரை செலவு செய்து உள்ளார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மின்னிணைப்பு கொடுங்கள் என அழுத்தம் கொடுத்தார். செவிசாய்க்காத மின்வாரிய ஊழியர்களிடம் பணத்தை திருப்பித் தாருங்கள் என கேட்டபோது படிப்பறிவில்லாத வெள்ளைசாமியிடம் வெள்ளைத்தாளில் ரேகையைப் பெற்றுக்கொண்டு அதன்பின் கண்டுகொள்ளவில்லை. பணம் கொடுத்தது குறித்து விசாரணைக்கு வந்தவர்களிடம் தெரிவித்த விபரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுசம்பந்தமாக வெள்ளைச்சாமி முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட மின்வாரிய அதிகாரி, லஞ்ச ஒழிப்பு துறை என அனைத்து தரப்பினருக்கும் புகார் செய்தும், மின்இணைப்பு கிடைக்காமல் பணத்தை செலவு செய்து காத்துக் கொண்டிருக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement