தலைமையாசிரியர்களுக்குலேப்டாப் வழங்கப்படுமா
திண்டுக்கல், :
'தலைமையாசிரியர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தினர். திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் அமிர்தராஜ் வரவேற்றார். மாநிலத் தலைவர் பீட்டர் ராஜா, பொதுச்செயலாளர் ராஜா பேசினர். மாவட்ட செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் வேளாங்கன்னி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.'அனைத்து பள்ளிகளிலும் துாய்மை பணியாளர், இரவு காவலர், இளநிலை உதவியாளர் பணி நியமனம் செய்ய வேண்டும். உயர்நிலை தலைமையாசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். பழுதான கட்டடங்களை விரைந்து இடிக்க வேண்டும். தலைமையாசிரியர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!