ADVERTISEMENT
திண்டுக்கல் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க திண்டுக்கல்லில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் ஆனவர்கள் 'பூஸ்டர்' டோஸ் செலுத்த வேண்டும் என, சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'பூஸ்டர்' டோஸ் செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதன்படி 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களை கடந்த முன் கள பணியாளர்கள், இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த செல்லும் போது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், முகாமில் டாக்டர் வழங்கிய தடுப்பூசி அட்டை அல்லது ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.கோவாக்சின், கோவிஷூல்டு தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆனவர்கள் கட்டாயம் 'பூஸ்டர்' டோஸ் செலுத்த வேண்டும். தாங்கள் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டிய தேதியை cowin.gov.in ல் register/sign in ஐ கிளிக் செய்து, அலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும். பின் 'ஓ.டி.பி.,' எண்ணை உள்ளீடு செய்து தடுப்பூசி செலுத்தியதன் விபரத்தை அறியலாம். மேலும் precaution dose (பூஸ்டர் ) செலுத்துவதற்கான தேதியையும் அறியலாம்.சுகாதாரத்துறையினர் கூறுகையில்,''ஒமைக்ரான் வேகமாக பரவ கூடியது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் வர வாய்ப்புள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தொற்று பரவலை தடுக்கவே பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் ஆனவர்கள் கட்டாயம் பூஸ்டர் டோஸ் போட வேண்டும்'' என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!