dinamalar telegram
Advertisement

போலீஸ் செய்திகள்

Share
பணத்தை கொடுத்தும் மிரட்டல்

சிவகாசி: நாரணாபுரம் ரோடு முனீஸ்வரன் காலனியை சேர்ந்தவர் சாமிநாதன் 28. மெடிக்கல் ஸ்டோர் நடத்திவரும் இவர் சிவகாசி வீரபத்திரன் என்பவர் மூலமாக நேரு காலனியை சேர்ந்த மாரி செல்வத்திடம் ரூ.ஒரு லட்சம் வார வட்டிக்கு வாங்கியிருந்தார். வட்டியை கொடுக்க முடியாத நிலையில் வீரபத்திரன் மாரிச்செல்வம் ஆகியோர் சாமிநாதனின் மெடிக்கல் ஸ்டோருக்கு வந்து டேபிள், சேர், கம்ப்யூட்டர் பிரின்டர், அலைபேசி, மருந்துப் பொருட்களை எடுத்துச் சென்றனர். சாமிநாதன் ரூ.ஒரு லட்சத்தை கொடுத்து பொருட்களை கேட்டபோது, நீ தான் இன்னும் ரூபாய் தரவேண்டும் என கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வலிப்பு நோயால் விழுந்தவர் பலி

சிவகாசி: சாமிபுரம் காலனியை சேர்ந்தவர் ஓவம்மாள் 55. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர், வீட்டில் வேலை செய்தபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

பீடி கம்பெனியில் ரூ.3 லட்சம் திருட்டு

சிவகாசி: தென்காசி ஆலங்குளம் பட்டமுடையார் புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். மினி குட்டி பீடி கம்பெனியில் பீடி தயாரித்து வருகிறார். சிவகாசி சித்துராஜபுரம் ராமசாமி நகரில் உள்ள தனக்கு சொந்தமான கட்டடத்தில் பீடி ஸ்டாக் வைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வியாபாரம் செய்து வந்தார். கட்டடத்தின் கதவைத் திறந்து உள்ளே இருந்த ரூ.3.15 லட்சத்தை திருடி சென்றனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement