தி.மு.க., வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?
நாமக்கல்:''கரும்புக்கு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய் என்ற வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும்,'' என, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் விருத்தகிரி கூறினார்.அவரது பேட்டி:தமிழகத்தில் கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் என, 44 சர்க்கரை ஆலைகள் இயங்கின. தற்போது, 10 ஆலைகள் மூடப்பட்டு, 34 மட்டுமே செயல்படுகின்றன. காரணம், போதுமான கரும்பு உற்பத்தி இல்லாமல், சாகுபடி பரப்பளவு குறைந்தது, சர்க்கரை தொழில் லாபகரமாக இல்லாததே.தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில், 'கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில், இந்த அரவை பருவம் மற்றும் நெல் அறுவடையும் துவங்கிய நிலையில், தமிழக அரசு, 'சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்' என்பதை பொய்யாக்கியுள்ளது. இது, விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.தமிழகத்தில், தொடர் பருவமழை காரணமாக கரும்பு மற்றும் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டு விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!