dinamalar telegram
Advertisement

ஜல்லி பரப்பி 4 மாதமாகியும் முடியாத ரோடு பணி : தினமும் அல்லாடும் மேலக்காந்தி நகர் மக்கள்

Share
சாத்துார், : ஜல்லிகற்கள் பரப்பி 4 மாதமாகியும் தார் ரோடு அமைக்கும் பணி சவ்வாக இழுப்பதால் சாத்துார் மேலக்காந்தி நகர் மக்கள் தினமும் அல்லாடுகின்றனர் . இப்பகுதியில் முறையானரோடு வசதி இன்றி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சாக்கடை பக்க சுவர்கள் இடிந்து, சாக்கடைமேல் உள்ள பாலங்கள் ஓட்டை விழுந்து காணப்படுகிறது.இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். தெரு விளக்குகள் எரியாது இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவை நடந்து செல்லும் முதியவர்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் வகையில் உலா வருகின்றன. மினி பவர் பம்ப் உடன் கூடிய தண்ணீர் தொட்டிகள் பழுதான நிலையில் காணப்படுகிறது. நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் இப்பகுதி மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement