dinamalar telegram
Advertisement

முப்பரிமாணத்தில் சாதிக்கும் சகோதரிகள்

Share
சிவகாசிஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர். பெண்களிடம் பொறுப்புணர்வு, கடமை, பொறுமை, திறமை, துணிவு, பணிவு அனைத்தும் அமைந்திருப்பதால் தான் எதையும் தாங்கும் இதயம் அவர்களிடம் உள்ளது. வீட்டு பொறுப்பையும் நிர்வகித்து கொண்டு வெளியில் வேலைக்கு செல்வது பெரிய சுமை. இதனால் அவர்களுக்கு சுய தொழில் வசதியானது. சுயதொழில் செய்து ஆண்களை போல் பெண்களும் தொழில் அதிபராக உயர்ந்து சமூக அந்தஸ்தை பெற முடியும். இதற்கேற்ப சிவகாசியை சேர்ந்த பட்டதாரி சகோதரிகளான கவுதமி, தீபா, ரக் ஷனா ஆகியோர் அவரவர் திறமைக்கு ஏற்ப சுய தொழில் செய்து சொந்தக்காலில் நிற்கின்றனர்.எம்பிராய்டரிங், பேஷன் டெக்னாலஜி, மேக்கப் ஆர்டிஸ்ட் என அசத்துகின்றனர். மூவரும் சிவகாசி இரட்டை சிலை அருகே செல்லம்மாள் மாலில் ஒரே இடத்தில் சுயமாக தொழில் செய்கின்றனர். அப்கிரேட் செய்து கொள்வோம் கவுதமி: சிறு வயதிலிருந்தே எம்ப்ராய்டரி மேல் நாட்டம் அதிகம். பள்ளி விடுமுறையின் போது எல்லா வகையான எம்பிராய்டரிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டேன். எனது நெருங்கிய தோழி திருமணத்திற்கு பிளவுஸ் டிசைன் செய்து கொடுத்தேன். இதன் பின் நான் பார்த்த வேலையை ராஜினாமா செய்து விட்டு ,சிவகாசியில் தந்தை சஞ்சீவியின் உதவியால் சிரிசாஸ் பெயரில் எம்ப்ராய்டரி டிசைன் துவக்கினேன். ஜர்தோசி, கட்டு ஒர்க், நெட் எம்ப்ராய்டரி என எல்லா வகையான எம்ப்ராய்டரிகளும் செய்து தருகிறேன். சகோதரிகள் மூவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் புது டிரெண்ட்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் அப்கிரேட் செய்து கொள்வோம்,என்றார்.ஆண்கள் ஆடைகளும் வடிவமைப்புதீபா: கல்லுாரி படிப்பு முடித்து குடும்ப தொழிலான பட்டாசு உற்பத்தி செய்வதில் ஈடுபட்டேன். சிறுவயதில் இருந்து பெண்கள் ஆடைகளை விட ஆண்கள் ஆடைகள் மீது ஆர்வம் அதிகம். ஹவுஸ் ஆப் தீ என்ற பெயரில் ஆண்களுக்கு தேவையான ஆடைகளை வடிவமைக்கும் நிறுவனத்தை துவக்கினேன். ஆடைகளை டிசைன் செய்வதில் ஆரம்பித்து அதற்கு பொருத்தமான உயர்தர துணிகளை கடைகளில் எடுத்து , அவற்றில் புதிதாக எம்பிராய்டரி செய்து தருகிறேன். எங்களின் ஒரே குறிக்கோள் குழந்தைகள் அணிவதற்கு ஏற்ப இலகுவான மெல்லிசான ஆடைகள் தயார் செய்வதுதான். உலகில் மிகவும் புதிதானது எம்பிராய்டரி. எங்களது தனித்தன்மை ஆண் குழந்தைகளின் ஆடைகளில் மிகவும் வித்தியாசமாக எம்பிராய்டரி ஆரி ஒர்க், கட்டு ஒர்க் செய்து காலத்திற்கு ஏற்ப நாகரீகமான ஆடைகளை தயார் செய்கிறோம். அந்த உடைகள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெண் குழந்தைகளுக்கு சமமாக காட்சி அளிக்கின்றன. மேக்கப் தொழில் அல்ல கலை ரக் ஷனா: சென்னையில் ஒருமாதம் மேக்கப் படிப்பை முடித்து,அதை பற்றி ஒவ்வொரு புத்தகமாக தேடி படித்து நானே கற்றுக் கொண்டேன். முகூர்த்தம் பை ரக் ஷனா என்ற பெயரில் இதனை துவக்கினேன். மேக்கப் என்பதை தொழிலாக மட்டுமின்றி அதை ஒரு கலையாக பார்க்கிறேன். பிரைடல், எடிட்டோரியல் ஷூட், பேஷன் மேக்கப், சாரி பிரீ பிளீடிங் அனைத்தும் நல்ல முறையில் செய்து வருகிறேன். என்னை தேர்ந்தெடுத்து வரும் மணப்பெண்ணிற்கு என்னென்ன தேவை உள்ளதோ அனைத்தையும் பார்த்து சிறப்பாக செய்து தருவேன். சிவகாசி மட்டுமல்லாமல் வெளியூர்களுக்கும் பயணம் செய்து மேக்கப் செய்வேன். சகோதரிகளை வாழ்த்த 98940 29777.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement