dinamalar telegram
Advertisement

வன சுற்றுலா மையங்கள் செல்ல இன்று, நாளை அனுமதி மறுப்பு

Share
ஸ்ரீவில்லிபுத்துார், :ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள தேவதானம் சாஸ்தா கோயில், ராஜபாளையம் அய்யனார் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு போன்ற மலையடிவார வனப்பகுதியில் சுற்றுலா மையங்கள் அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளின்படி இன்றும், நாளையும் (ஜன.15, 16) மூடப்படுகிறது. பொங்கல் விடுமுறை, ஞாயிறு ஊரடங்கு முன்னிட்டு அதிகளவில் மக்கள் வனப்பகுதிக்கு வருவதால், நோய் பரவல் பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்முடிஎடுக்கப்பட்டுள்ளது.உள்ளூர், வெளியூர் மக்கள் வனப்பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறு புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து வனப்பகுதியில் கூடுதல் வனப்பணியாளர்கள் குவிக்கப்பட்டு இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement