dinamalar telegram
Advertisement

தினம் தினம் தொடர்கிறது சாலை மறியல்

Share
ராஜபாளையம் விருதுநகர் மாவட்டத்தில் போராட்டம் என்ற பெயரில் தினம் தினம் தொடரும் சாலை மறியல்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் நிலையில் , இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு இதற்கு முடிவு கட்ட வேண்டும். மாவட்டத்தில் குறிப்பிட்ட சிலருக்கு ஏற்படும் குடிநீர், ரோடு வசதி, உரிமை மறுப்பு உள்ளிட்ட அடிப்படை வசதி குறைகளை கவனிக்க கோரி மட்டுமே மறியல்கள் நடந்தன. தற்போது இந்நடைமுறை பேஷனாக மாறி எடுத்தற்கெல்லாம் சாலை மறியல் நடைபெற்று வருகிறது. விபத்து, மதுக்கடை எதிர்ப்பு, அரசின் கொள்கை கண்டித்து, புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு, கல்வி கட்டணம் , பஸ் விடக்கோரி, சம்பள நிலுவை தொகை வழங்க என விதவிதமான வலியுறுத்தல்களுடன் மறியல் பெயரில் பொது போக்குவரத்து வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.இது தவிர அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் சார்பில் தேவைக்கேற்ப அவ்வப்போது மத்திய, மாநில அரசை கண்டித்தும் மறியல்கள் நடைபெறுகின்றன. இதனால் அன்றாட வேலை , பள்ளி கல்லுாரி ,அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகள் உள்ளிட்டோர் சாலைகளில் சிக்கி தவிக்கின்றனர்.போராட்டத்தை நடத்துபவர்களுக்கு பல்வேறு வழிமுறைகள் இருப்பினும் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவதை பற்றி சிறிதும் கவனத்தில் கொள்வதில்லை. இதுபோன்ற மனநிலை மாறும் வகையில் ,அதிகாரிகள் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்றி மறியல்களை வ தடுக்க முடியும்..........பேஷனாக மாறுது தங்கள் பிரச்னைகளுக்கு சம்பந்தமில்லாத பொதுமக்களை பாதிக்கும் மறியலில் ஈடுபடுவோர் மீது ,சட்ட நடவடிக்கை எடுக்காததால் இச்செயல்கள் தொடர்கின்றன. ராஜபாளையம் சுற்றுப்பகுதியில் சமீபமாக அடிக்கடி நடைபெறும் சாலை மறியல்கள் இதற்கு உதாரணம். இதைக்கண்டு பல்வேறு தரப்பினரும் ஒரு பேஷனாக கருதி மறியலில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களை சங்கடத்திற்கு உள்ளாக்கும் இச்செயல்களை தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.சஞ்சீவி, தொழில் முனைவோர், ராஜபாளையம்..........
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement