dinamalar telegram
Advertisement

எஸ்.பி., சட்ட ஆலோசகர் பணிக்கு அழைப்பு

Share
விருதுநகர், :விருதுநகர் எஸ்.பி.,க்கு அரசு அலுவல், நீதிமன்ற பணிகளில் சட்ட ஆலோசனைகள் வழங்க சட்ட அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர். ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் மூன்றாண்டு பி.எல்.,, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவு செய்து, உயர், மாவட்ட நீதிமன்றம், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் குற்றவியல் தொடர்பான சட்ட முன் அனுபவத்துடன் 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பணியாற்றியிருக்க வேண்டும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். பணியில் திருப்தி இல்லையெனில் ஒப்பந்தம் எந் நேரத்திலும் எஸ்.பி.,யால் ரத்து செய்யப்படும். மாதம் ரூ. 26 ஆயிரம் வீதம் தொகுப்பூதியம் மட்டும் வழங்கப்படும். விரும்புவோர் ஜன.20 க்குள் எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள பொது நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை பெற்று சமர்பிக்கலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement