dinamalar telegram
Advertisement

இரங்காதோர் மனம் கூட இரங்கும்! நீ எதிர்வந்தால் எதிர்காலம் துலங்கும்! மாட்டு பொங்கல் ஸ்பெஷல்

Share
Tamil News
மாட்டுப்பொங்கல் கொண்டாடுவது ஏன்தாய் நமக்கு பிறவியைக் கொடுத்தவள். பாலுாட்டி சீராட்டி வளர்த்தவள். அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பது போல இன்னும் ஒரு அம்மாவுக்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். வாழும் காலம் வரைக்கும் நமக்கு பால் கொடுத்து உதவும் கோமாதா தான்.


அன்பும், சாந்தமும் நிறைந்த பசுவைக் கண்டால் பெற்ற தாயைப் பார்த்தது போல மனதில் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும். வாயில்லா ஜீவனாக இருந்தாலும் மற்ற பிராணிக்கு இல்லாத சிறப்பாக பசு மட்டுமே 'அம்மா' என்று அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பும். குழந்தையாக இருந்தபோது மட்டுமே பெற்ற தாய் பாலுாட்டுகிறாள். பசுவோ காலம் முழுக்க நமக்கு பால் தருகிறது, இதே போல காளைகள் நமக்கு உணவளிக்கும் பணியில் கடுமையாக பாடுபடுகின்றன. கலப்பையை இழுத்துக் கொண்டு களிமண் நிறைந்த நிலத்தை கடும் பாடுபட்டு உழுகிறது. வண்டிகளை இழுக்கிறது. செக்கு இழுக்கிறது. எனவே அவற்றையும் நம் குடும்பத்தின் அங்கமாக நினைத்து நன்றியுடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறோம்.

நெய் மணக்கும் சிவன்சிவனுக்கு பால், தயிர், நெய் ஆகிய மூன்றாலும் தனித்தனியாக அபிஷேகம் செய்யும் வழக்கம் இருக்கிறது. நெய் அபிஷேகம் செய்தால் மோட்சம் உண்டாகும் என்கிறது ஆகமம். திருவையாறு அருகிலுள்ள சிவத்தலமான தில்லைஸ்தானத்தில் உள்ள சிவன் 'நெய்யாடியப்பர்' என்று வழங்கப்படுகிறார்.

உலகம் சுற்ற ஆசையாபாரத தேசம் முழுவதும் புனிதமான கோயில்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை எல்லாம் தரிசிக்க வாழ்நாள் போதாது. புனித நதிகள், கடல்களும் கூட நம் நாட்டில் நிறைய உண்டு. இவற்றில்
நீராடவும் வாய்ப்பில்லை. ஆனால், இந்த புண்ணிய பலனை எளிதாக அடைய ஒரே வழி கோமாதாவான பசுவை வணங்குவது தான். அதன் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். புண்ணிய தீர்த்தங்கள், மலைகள்
எல்லாம் அதன் உடலில் அடங்கியுள்ளன. தினமும் காலையில் நீராடியதும் பசுவை வலம் வந்து வணங்கினால் உலகை சுற்றி வந்த புண்ணியம் ஒரே நிமிடத்தில் கிடைத்து விடும்.

அதிகாலை... சுபவேளைபசுவின் குளம்படி பட்ட புழுதியை கோதுாளி என்பர். பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது புழுதிப்படலம் கிளம்பும். அது நம் உடம்பில் பட நேர்ந்தால் பாவம்
நீங்கும். புனித நதியில் நீராடிய புண்ணியம் சேரும் என்கிறது சாஸ்திரம். கிருஷ்ணரின் மேனி எங்கும் கோதுாளி பட்டதால் அவர் அழகுக்கு அழகு
சேர்ந்ததாக பாகவதம் வர்ணிக்கிறது. கோவிந்த அஷ்டகம் என்னும் ஸ்தோத்திரத்தில், கிருஷ்ணர் கோதுாளியில் திளைத்தாடியதை ஆதிசங்கரர் போற்றியுள்ளார். மேய்ச்சல் முடிந்து பசுக்கள் வீடு திரும்பும் மாலை நேரத்தை
'கோதுாளி லக்னம்' என்று சொல்வர். அதிகாலை, மாலை நேரமான இந்த சுபவேளையில் தொடங்கும் செயல்கள் கிருஷ்ணர் அருளால் இனிதே நிறைவேறும்.

காஞ்சி மஹாபெரியவர் சொல்றதைக்கேளுங்கஅந்தணர்களுக்கு பசு தானம் செய்வதால் கொடிய பாவங்கள் கூட நீங்கி விடும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், பசுவை தானமாகப் பெறுபவர் அதனைப் பாதுகாப்பாரா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சியவன மகரிஷி ஸ்லோகம் ஒன்றில், 'எங்கு பசுக்கள் பயமின்றி துன்பம் இல்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதோ அங்கு பாவம் எல்லாம் நீங்கி நாடே
ஒளி பெற்றுத் திகழும்' என சொல்லிஉள்ளார். 'அந்த உயர்ந்த நிலையை உலகம் அடைய கிருஷ்ணர் அருள் புரியட்டும்' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.

சகஸ்ரநாமத்தில் கோமாதாலலிதா சகஸ்ர நாமத்தில் அம்பாளுக்கு 'கோமாதா'
என்று பெயர் வழங்கப்படுகிறது. சில கோயில்களில்
பராசக்தியே பசு வடிவில் வந்ததாக கூறப்பட்டுள்
ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில்
அம்பாளின் பெயரே 'கோ'மதி அல்லது
'ஆ'வுடை என உள்ளது. 'கோ' என்றாலும்,
'ஆ' என்றாலும் 'பசு' என்று பொருள்படும்
அம்பிகையின்
சகோதரரான
மகாவிஷ்ணு
பூலோகத்திற்கு
வந்து பசு
வடிவில் இருந்த
தங்கையைப்
பாதுகாத்து
சிவனுக்கு
திருமணம் செய்து
வைத்ததாக
சொல்வர்.

பெண்களுக்கு நல்ல செய்திசமைப்பதில் கில்லாடியாக இருக்கும் பெண்களா நீங்கள்... உங்களுக்கான செய்தி இது. பால் தரும் கறவை பசுவுக்கு நேரத்திற்கு சரியாக புல், புண்ணாக்கு, தவிடு என ஆகாரம் அளிப்பர். வயதாகி கறவை நின்றதும் உணவளிக்காமல் விட்டு விடுவர். இதனால் பாவம் உண்டாகும் என்று
சாஸ்திரம் கூறுகிறது. சமையலில் ஈடுபடும் பெண்கள் நினைத்தால் பசுவைப் பாதுகாக்க முடியும். தினமும் வீட்டில் சமைக்கும் போது காய்கறிகளில் இருந்து கிடைக்கும் தோல், வேண்டாத கழிவுகளைச் சேகரித்து
பசுக்களுக்கு உணவாக கொடுக்கலாம். வீடுகளில் இதனைச் சேகரிக்கும் பணியில் சமூக சேவை நிறுவனங்கள் ஈடுபட்டால் பலன் எளிதில் கிடைக்கும்.

பாவம் தீர்க்கும் கொம்புசிவனை அபிஷேகப்பிரியர் என்பர். ருத்ர சமகம் என்ற மந்திரம் ஜெபித்து பசுவின் கொம்பு வழியாக சிவனுக்கு பாலபிஷேகம் செய்வது புனிதமானதாகும். பால் மட்டுமில்லாமல்
பஞ்சகவ்யம் என்னும் பால், தயிர், நெய், கோமியம் (பசு மூத்திரம்), கோமயம்(சாணம்) ஆகிய ஐந்தையும் கொம்பு மூலமாக சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதைப்பார்த்தால் பாவம் நீங்கி புண்ணியம்
உண்டாகும்.

மாட்டுக்கு கீரை கொடுங்ககோயில்களில் மாடுகளுக்கு கீரை கொடுக்கும் பழக்கம் இப்போது அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்க விஷயம். ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இழந்து (நீச்சம்) இருந்தால் திருமணத்தடை, குடும்பத்தில் ஒற்றுமையின்மை போன்ற பிரச்னை உள்ளவர்கள் தினமும் மாடுகளுக்கு கீரை கொடுக்கலாம். பசுவுக்கு துன்பம் இழைத்தவர்களுக்கு சாபம் ஏற்பட்டு வழிவழியாக தொடரும். இதனால் ஏற்படும் தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கு அகத்திக்கீரை, புல், பழம் கொடுக்கலாம். கீரை கொடுக்கும் போது, “காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை தருபவளே! பரிசுத்தமானவளே! புண்ணியம் மிக்கவளே! மூவுலகிற்கும் தாயாகத் திகழ்பவளே! இந்த புல்லை உண்டு மகிழ்
வாயாக! பசுத்தாயே! உன் மேனி முழுவதும் எல்லா உலகங்களும் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த பூலோகத்திலும், பரலோகத்திலும் எனக்கு மங்களத்தை அருள்வாயாக,” என்று சொல்ல வேண்டும்.

மரம் போல மாடும் இருக்கணும்!பசுவின் சாணத்தை கோமயம் என்பர். பொதுவாக மிருகங்களின் மலத்தால் நோய்கள் பரவும். ஆனால் பசுவின் சாணம் மட்டும் கிருமி நாசினியாக விளங்குகிறது. அந்தக்காலத்தில் வீடு முழுவதும் வீட்டின் தரையை மெழுகுவர். வாசல் தெளிப்பதற்கும் சாணம் கரைத்த தண்ணீரையே தெளிப்பர். இதன் மூலம் வீட்டுக்குள் பூச்சி, நோய்க்கிருமிகள் அண்டாது. வீட்டில் பசு இருந்தால் அந்த
வீட்டிற்கு சுபலட்சுமி தேடி வருவாள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பது போல பசுமாடு ஒன்றும் இருப்பது அவசியம்.

பெருமை பேசும் தேவாரம்சிவனுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம்
செய்வது சிறப்பானது. பசுவிடம் இருந்து
கிடைக்கும் பால், தயிர்,
நெய், கோமியம்,
சாணம் என ஐந்தும் சேர்ந்த
கலவையே 'பஞ்ச கவ்யம்'.
தேவாரத்திலுள்ள
நமசிவாய பதிகத்தில்
திருநாவுக்கரசர்,
'ஆவினுக்கு அருங்கலம்
அரன் அஞ்சாடுதல்'
என்று குறிப்பிடுகிறார்.
'சிவனுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்வது பசுவுக்கு கிடைத்த பெருமை' என்பது இதன் பொருள்.

பின்புறத்தில் லட்சுமிலட்சுமி வாசம் செய்யும் இடங்கள் ஐந்து. அவை சுமங்கலியின் நெற்றி வகிடு, மலர்ந்த தாமரையின் உள்பாகம், யானையின் தலை, வில்வ இலையின் பின்புறம், பசுவின் பிருஷ்டம் (பின்புறம்) ஆகியவை. இவற்றுக்கு 'லட்சுமி நிவாஸம்' (லட்சுமி தங்குமிடம்) என்று பெயர். இவற்றில் கோமியமும், சாணமும் வெளிப்படும் பின்பாகத்தில்
லட்சுமி இருக்கிறாள். பசுவின் உடம்பில் எந்த பாகமும் தாழ்வானது இல்லை என்பதை இது உணர்த்துகிறது. செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி வாசம் செய்வதால் பசுவின் பின்புறத்தில் சந்தனம், குங்குமம் இட்டு அர்ச்சனை செய்வர்.

பார்த்தால் பாவம் தீரும்பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும் என்கிறது சாஸ்திரம். காலையில் எழுந்ததும் பசுவை தரிசித்தால் அந்த நாள் முழுவதும் நல்ல நாளாக அமையும். நல்ல விஷயமாக வெளியில் கிளம்பும் போது கன்றுடன் கூடிய பசுவைக் கண்டால் வெற்றி கிடைக்கும். மாட்டுக் கொட்டில் இருக்கும் வீட்டில் தெய்வ அருள் எப்போதும் நிறைந்திருக்கும். கொட்டிலுக்கு 'கோஷ்டம்' என்று பெயர். கோயிலில் மூலஸ்தான சுற்றுச்சுவரை 'கோஷ்டம்' என்பர். கோஷ்டத்தைக் காட்டிலும் பரிசுத்தமான இடம் வேறில்லை என்கிறது சாஸ்திரம். அங்கு மந்திரம் ஜெபித்தால் அதன் நன்மை கோடி
மடங்காக இருக்கும்.

வரம் தரும் காமதேனுதேவலோகப் பசுவான காமதேனு பெண் முகமும், பசுவின் உடம்பும் கொண்டது. பாற்கடலில் இருந்து பிறந்த இந்தப் பசு, கேட்டதை எல்லாம் வாரி வழங்கும் தன்மை கொண்டது. “உலகத்தின் தாயான காமாட்சி அன்னையே காமதேனுவாக இருந்து
கேட்டதை நமக்கு தருகிறாள்,” என மூகர் என்ற புலவர், பஞ்சசதீ என்னும் ஸ்தோத்திரத்தில் குறிப்பிடுகிறார். கோயில் திருவிழாவில் அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி வரும் போது வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.மந்திரப்பாட்டு சிவபெருமானே பசுவின் சாணத்தில் இருந்து திருநீறு தயாரிக்கும் முறையை சொல்லியுள்ள விபரம்
உபநிஷதம் ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. சிவனுக்கு திருநீற்றால் அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியமும் உண்டாகும் என்று காரண ஆகமம் கூறுகிறது. கூன் பாண்டியனின் வெப்புநோயைப் போக்க ஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார். இதை படிப்பவர்களிடம் மந்திரமோ, தந்திரமோ எடுபடாது. ஏனென்றால் திருநீறே சிறந்த மந்திரமாகவும், தந்திரமாகவும் விளங்குகிறது என்கிறார் ஞானசம்பந்தர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement