dinamalar telegram
Advertisement

மலபார் கோல்டு டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா 

Share
Tamil News
திருப்பூர்:திருப்பூர், குமரன் ரோட்டில், மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸின் புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.இதனை, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் திறந்து வைத்தார். மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், வணிக தலைவர் சபீர் அலி, மண்டல தலைவர்கள் அமீர்பாபு (வடக்கு), நவுசாத் (மேற்கு), சுதீர் அகமது (தெற்கு), சேலம் கிளை தலைவர் ராஜசேகரன், திருப்பூர் கிளை தலைவர் பாஹிம், ஈரோடு கிளை தலைவர் அஷரப் பங்கேற்றனர்.ேஷாரூம் சிறப்பு குறித்து, அதன் நிர்வாகி கூறியதாவது:வைர நகைகளான மைன், வெட்டப்படாத வைரத்தால் செய்யப்பட்ட எரா, விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான பிரீஷியா, கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட எத்தினிக், இந்திய பாரம்பரிய வடிவமைப்பான டிவைன்; குழந்தைகளுக்கான ஸ்டார்லெட் நகைகள் உள்ளன.எங்கள் நிறுவனம், 10 நாடுகளில், 28 விற்பனை மையங்களை கொண்டுள்ளது, மலபார் நிறுவனம். தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை உட்பட பல நகரங்களில், மொத்தம் 18 கிளைகள் உள்ளன.பி.ஐ.எஸ்., சான்று பெற்ற 916 தங்க நகைகள்; ஐ.ஜி.ஐ., சான்று பெற்ற வைர நகைகள்; பி.ஜி.ஐ., சான்று பெற்ற பிளாட்டிணம் நகைகள், ஹால்மார்க் சான்று பெற்ற வெள்ளி நகைகளை மட்டுமே விற்பனை செய்கிறோம்.அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, சேதாரம், கற்களுக்கான விலை, அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 93441 77788 என்ற எண்ணில் அழைக்கலாம் இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement