dinamalar telegram
Advertisement

பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்: பழநிக்கு அவசரகதியில் சென்றனர்

Share
திருப்பூர்;பாதயாத்திரையை பாதியில் கைவிட்ட முருக பக்தர்கள், வாகனங்களில் பழநி சென்று, அவசரகதியில் சுவாமி தரிசனம் செய்தனர்.தொற்று அதிகரித்துள்ளதால், ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கு வரும் என்ற அச்சத்தில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள், மார்கழி மாதமே பாதயாத்திரை சென்று, முருகனை வழிபட்டு வருகின்றனர்.ஞாயிறு ஊரடங்கு என்பதால், அதற்கு முன்பாக பழநி சென்று சுவாமி தரிசனம் செய்யும் திட்டத்துடன், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட முருகபக்தர்கள், பாதயாத்திரை மேற்கொண்டிருந்தனர்.பாதயாத்திரை செல்லும் பக்தர்களை எப்படியும் தரிசனம் செய்ய அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன், நடைபயணமாக சென்றனர். இருப்பினும், '14 ம் தேதி முதல், 18 வரை தரிசன அனுமதி கிடையாது; கோவில்கள் மூடப்படும்' என்று, அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், பாதயாத்திரையை பாதியில் கைவிட்டு, வாகனங்களில் பழநி சென்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில் சிக்கி, நெரிசலில் நீந்தியபடி சென்று, முருகனை தரிசனம் செய்துள்ளனர்.இதுகுறித்து பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள் சிலர் கூறியதாவது:கொரோனா காரணமாக, தைப்பூச தேர்த்திருவிழாவை நிறுத்தியதை ஏற்கிறோம்; முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்பவர்களுக்கு தடங்கல் செய்திருக்க கூடாது. பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், பழநி உள்ளிட்ட முருகன்கோவில்களில், சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியிருக்கலாம்.மாறாக, திடீரென அனுமதியில்லை என்று கூறியதால், பாதயாத்திரையை பாதியில் கைவிட்டு, அவசரமாக வாகனங்களை பிடித்து சென்று, இரவு நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து திரும்பினோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement