dinamalar telegram
Advertisement

உழவர் உற்பத்தி நிறுவனம் துவங்க 300 விவசாயிகள் போதும்!

Share
திருப்பூர்:கூட்டு பண்ணையம் திட்டத்தில், உழவர் உற்பத்தி நிறுவனம் துவக்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் கூட்டு பண்ணையம் திட்டத்தில், விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையிலான மானிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, விவசாயிகளை ஒன்றிணைத்து, உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்குவதன் மூலம், விளைவிக்கும் பொருட்களை, ஒருங்கிணைத்து, நியாயமான நிலைக்கு விற்க வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.மாவட்டம் தோறும், உழவர் உற்பத்தியாளர் குழுக்களிடையே, வாடகை வருவாய் ஈட்டுவதில் போட்டி ஏற்பட்டது. மாநில அளவில், வருவாய் ஈட்டியதில், திருப்பூர் மாவட்டம், முதல் ஐந்து இடத்துக்கு முன்னேறியுள்ளது.உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் இணைந்து, உழவர் உற்பத்தி நிறுவனம் துவக்க, 1,000 உறுப்பினர் இருக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. பல்வேறு மாவட்ட விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, உழவர் உற்பத்தி நிறுவனம் துவக்குவதற்கான விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:கூட்டு பண்ணையம் திட்டத்தில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக உள்ள விவசாயிகள், ஒன்றிணைந்து, உற்பத்தி நிறுவனங்களை துவக்கலாம். அதற்கு, 10 குழுக்களை சேர்ந்த, 1000 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.அவ்வகையில், உழவர் உற்பத்தி குழுக்களில் உள்ள, 300 விவசாயிகள் சேர்ந்து, உழவர் உற்பத்தி நிறுவனங்களை துவக்கலாம். பயிர் செய்யும் விவசாயிகள், நிறுவனத்தை நிர்வகிக்கும் அளவுக்கு உயரலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement