dinamalar telegram
Advertisement

உலகளாவிய சூரிய நமஸ்காரம் ஒரு கோடி மக்கள் பங்கேற்பு

Share
புதுடில்லி-உலகம் முழுதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் நேற்று சூரிய நமஸ்காரம் நிகழ்வில் பங்கேற்றதாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனவால் 'ஆன்லைன்' வாயிலாக நேற்று துவக்கி வைத்தார்.

''பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின் அடிப்படையில் மனித குலத்தின் ஆரோக்கியத்திற்காக யோகா மற்றும் சூரிய நமஸ்காரம் செய்யப்படுவதுடன், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இது மிகச்சிறந்த வழி,'' என, அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில்,கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், உலக அளவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • ஆரூர் ரங் -

    ஞாயிறு போற்றுதும் 🙏. ஞாயிறு போற்றுதும்.

  • sankaseshan - mumbai,இந்தியா

    யோகாவும் சூரிய நமஸ்காரமும் பாரதம் உலகிற்க்கு கொடுத்த நன்கொடை

  • Tamilan - NA,இந்தியா

    பிரச்சார உத்திகள். ஒரு பிரயோஜனமும் இருக்காது . இதில் கலந்துகொண்டவர்கலில் பெரும்பாலானோர், இதற்க்கு தகுதியற்றவர்கள் .

  • Kumar - Madurai,இந்தியா

    நமஸ்காரமா?நாங்க மாட்ட்டோம். யாரு அவர்கள்? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    காலை வெயில் உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்க வல்லது. குறிப்பாக சூரிய உதயத்தைப்பார்ப்பது சிறப்பானது.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்