dinamalar telegram
Advertisement

வந்து பாரு என ஆட்டம் காட்டிய காளைகள்... இந்தா பாரு என அடக்கிய வீரர்கள்...: கோவிட் கட்டுப்பாடுகளுடன் களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Share
மதுரை -தைப்பொங்கலையொட்டி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்ஆட்டம் காட்டிய ஆக்ரோஷ காளைகளை மடக்கி அடக்கிய வீராதி வீரர்களால் போட்டி களம் களைகட்டியது.

வாடிவாசலில் சிங்கமாய் சீறி பாய்ந்த காளைகளை கண்டமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் அமைத்த தற்காலிக வாடிவாசலின் பின் வரிசை கட்டி நின்றகாளைகள், களத்தில் வீரர்கள், கொரோனா கட்டுப்பாடுடன் பார்வையாளர்கள்150 பேர் குவிந்திருக்க முறைப்படி காளைகளை அடக்குவோம் என வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

காலை 7:25 மணிக்கு அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் கொடியசைத்து ஜல்லிக்கட்டை துவக்கி வைத்ததும், கோயில் காளைகள் முதலில் களமிறங்கின. எம்.பி., சு.வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜன் செல்லப்பா, பூமிநாதன், கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், துணை கமிஷனர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணைகமிஷனர்கள் தங்கத்துரை, ஆறுமுகச்சாமி காளைகளுடன் களமாடிய வீரர்களை உற்சாகப்படுத்தினர்.முதல் முறையாக செக் பாய்ன்ட்வாடிவாசல் வரை காளைகளை வரிசையாக அனுப்ப வசதியாக திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் ரோடு முத்துப்பட்டி பிரிவு முதல், காளை பரிசோதனை மையம் வரை 9 'செக் பாய்ன்ட்' முதன் முறையாக வைத்திருந்தனர்.

திலகர் திடல் உதவிகமிஷனர் பழனிக்குமார் தலைமையில் போலீசார் 200 காளைவீதம் நிறுத்தி அனுமதி சீட்டை ஆய்வு செய்து, 'சீல்' வைத்து அடுத்த 'பாய்ன்ட்' அனுப்பினர். ஒரே வரிசையில் நிற்கும்படி அமைத்த தடுப்புகள் வழியாக காளை, உரிமையாளர்கள் கால்நடை பரிசோதனை மையம் சென்றனர். வரிசையில் தெறிக்கவிட்ட சில காளைகளின் கண்களை கட்டி, தலையில் தண்ணீர் ஊற்றி சாந்தப்படுத்தி அழைத்து சென்றனர்.காளைகளுக்கு மது பரிசோதனைமண்டல கால்நடை இணை இயக்குனர் நடராஜகுமார் தலைமையில் உதவி இயக்குனர்கள் ராஜா, சரவணன், வைரவசாமி, தலைமை டாக்டர் ஜெயகோபி உட்பட டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு பணியாளர்கள் காளைகளுக்கு மது உள்ளிட்ட பிற தடை செய்த பானம்கொடுக்கப்பட்டுள்ளதா என பரிசோதனை செய்து அனுப்பினர்.

பரிசோதனை மையத்தில் காளைகளுக்கு குடிநீர், தீவனம் வைக்கப்பட்டன. நெரிசலின்றி சோதனை செய்ய தடுப்புகள் ஏற்படுத்தி தனி கவுன்டர்கள் இருந்தன. உரிமையாளர், காளைகள் அனுமதி சீட்டில் போலீஸ் 'சீல்' இருப்பது உறுதி செய்யப்பட்டது.70 காளைகளும்... 50 வீரர்களும்...ஆன்லைனில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 2001 வீரர்கள், 800 காளைகள் பதிவு செய்யப்பட்டு அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. அதிகாலை 5:00 மணி - காலை 11:00 மணி வரை 571 காளைகள் வந்தன. சரியான ஆவணம் இல்லாத 3 காளை திருப்பி அனுப்பப்பட்டன. ஒரு மணி நேரம் கொண்ட ஒவ்வொரு ரவுண்டுக்கும் 70 காளைகளும், 50 வீரர்களும் களமிறங்கினர்.ஒவ்வொரு ரவுண்டுகளிலும் அதிக காளை அடக்கிய வீரர்கள் அடுத்த ரவுண்டு அனுமதிக்கப்பட்டனர்.

வழக்கம் போல் களமிறங்கும் வீரர்களை அடையாளம் காண கலர் டீசர்ட் வழங்கப்பட்டன. ஆக்சிஜனுடன்அவசர சிகிச்சைமதுரை அரசு மருத்துவமனை, மாநகராட்சி சுகாதார துறை டாக்டர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட மருத்துவ குழுவுடன் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் 7 படுக்கைகொண்ட அவசர சிகிச்சை பிரிவு தயாராக இருந்தது. வீரர்களிடம் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய, ஆர்.டி.பி.சி.ஆர்., சான்றுகளைகுழுவினர் பரிசோதனை செய்தனர்.வீரர்களுக்கு உணவு, கபசுர குடிநீர், ஓ.ஆர்.எஸ். கரைசல், குளிர்பானம், டீ, பிஸ்கட் வழங்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் 10, 108 டூவீலர்கள் 4, கால்நடை ஆம்புலன்ஸ் 2 மருத்துவ குழுவினருடன் களத்தில் நின்றது. காயமடையும் வீரர்களை ரெட் கிராஸ் குழுவினர் மீட்டனர்.டி.ஆர்.ஓ.,செந்தில்குமாரி, ஆர்.டி.ஓ., பாத்திமா, தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஆர்.ஐ.,பிருந்தா, மாநகராட்சி நகர்நல அலுவலர் ராஜா, உதவி அலுவலர் தினேஷ்குமார், பங்கேற்றனர். தீயணைப்பு வீரர்கள், 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பார்வையாளர் பலிவாடிவாசல் அருகே காளை வெளியே வருவதை, வேடிக்கை பார்த்த அவனியாபுரம் பாலமுருகன், 18, இடது மார்பில் காளை முட்டியதால், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். காயமடைந்த 84 பேரில் 21 பேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.ஆன்லைன் முன்பதிவு அறிமுகம் அசத்தல்கொரோனா கட்டுப்பாடு இருப்பதால் ஜல்லிக்கட்டில் காளைகள், வீரர்கள் பங்கேற்க முதல் முறையாக ஆன்லைன் முன்பதிவு அறிமுகமானது.

அமைச்சர் மூர்த்தி ஆலோசனைபடி கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் என அரசு அதிகாரிகள் குறுகிய காலத்தில் விரைவாக செயல்பட்டு ஆன்லைன் முன்பதிவு ஆரம்பித்து அசத்தினர்.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டிற்கு ஆன்லைனில் 6450 காளைகள் பதிவு செய்யப்பட்டன. தகுதியில்லா340 காளைகள் நீக்கப்பட்டன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முன்னுரிமை அடிப்படையில் முதலில் 196 உள்ளூர் காளைகள் களமிறங்கின.காளை உரிமையாளர்கள் பிரவுசிங் சென்டர், இ-சேவை மைய இ- மெயில் வழியே முன்பதிவு செய்ததால் அனுமதி சீட்டு நேரடியாக கிடைக்கவில்லை.

இதை கண்டறிந்த இணைய பிரிவினர் மென்பொருள் மூலம் உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினர். 15 கால்நடைடாக்டர்கள், 2 தாசில்தார், 10 வி.ஏ.ஓ.,க்கள் ஆன்லைன் பணியில் ஈடுபட்டனர். ஆன்லைனில் சில குளறுபடி இருந்தாலும் தில்லுமுல்லு நடக்காமல் காளைகளை அனுப்ப உதவியது. இனியும் ஆன்லைன் முறைதொடர வேண்டும் என பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

* சிங்கப்பெண் சுகந்திசொந்த ஊர் மதுரை சோளங்குருணி. 10 ஆண்டுகளாக என் 'முத்துக்காளை' ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்குது. ஒரு முறை கூட பிடிமாடுனு பட்டம் வாங்கினது இல்லை. எல்லா வாடியிலும் சும்மா நின்னு மிரட்டி, ஜெயிச்சுட்டு தான் வரும். பாராட்டி, சீராட்டி குழந்தை போல் வளர்ப்பதால் ரொம்ப பாசம் காட்டுவான்.///*

வீரச்சிறுமி ஸ்வேதாசொந்த ஊர் மதுரை சிந்தாமணி, 10வது படிக்கிறேன். வீட்டில் ஒருத்தனா நினைச்சு காளை 'ராமு'வை வளர்க்கிறோம். இதுக்கு தீனி வைக்குறது, பராமரிக்கிறது எல்லாம் என் பொறுப்பு. பொதுவாக இவன் மனசு தங்கம். ஆனால், போட்டினு வந்துட்டா சிங்கமா சீறுவான். மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் பரிசு வாங்கிட்டு வந்திருக்கான்

*** முதலிட வீரருக்கு முதல்வர் சார்பில் கார் பரிசுஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்கள், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க காசுகள், பாத்திரங்கள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டது. கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷன் கார்த்திகேயன், எஸ்.பி., பாஸ்கரன் சிறந்த காளைகள், வீரர்களுக்கு தங்க காசு பரிசளித்தனர்.

போட்டியில் 24 காளைகள் அடக்கி, முதலிடம் பிடித்த அவனியாபுரம் கார்த்திக், முதன் முறையாக முதல்வர் ஸ்டாலின் வழங்கிய காரை வென்றார். 19 காளைகள் அடக்கிய வலையங்குளம் முருகன் இரண்டாம் இடம் பெற்று டூ - வீலர் வென்றார். 11 காளைகள் அடக்கிய பரத், மூன்றாம் இடம் பெற்று பசுவும் கன்றும் வென்றார்.காலை 7:25 மணிக்கு துவங்கிய போட்டி மாலை 5:10 மணிக்கு முடிந்தது. ஏழு சுற்றுக்களில்568 காளைகள், 300 வீரர்கள் களமிறங்கினர்.விழா கமிட்டிகளிடம் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட நிர்வாகமே போட்டியை நடத்தியது. சிறந்த காளை உரிமையாளர் மணப்பாறை தேவசகாயத்திற்கு டூ-வீலர் பரிசு வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • Tamilan - NA,இந்தியா

  ///

 • Sri - Ghisin,கோஸ்டாரிகா

  Covid wave..this event will be super spreader ?? note worldwide there is a huge shortage of testing kit..TN Govt ..playing ignorant game on covid

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காங்கிரசும் திமுகவும் சேர்ந்து தடை செய்த பாரம்பரியமான வீர விளையாட்டை திரும்பக்கொண்டுவந்த மோடிக்கு பொதுமக்கள் என்றும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் லேபல் ஒட்டுவதில் சிறப்பான திறமை பெற்ற திமுக பாடத்திட்டத்தில் பொய்களைக்கூட அள்ளிவிட தயாராக இருக்கும். தமிழன் என்றும் நன்றி மறக்கக்கூடாது.

  • ramesh - chennai,இந்தியா

   லேபிள் ஓட்டும் கலாச்சாரத்தை சென்னை வெள்ளத்தின் பொது உணவு பொருட்களில் ஸ்டிக்கர்ட் ஒட்டியது பாடப்புத்தகத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது என்று அனைத்தையும் கொண்டுவந்ததே தாங்கள் தானே பாஸ்கரன் அவர்களே.மோடியால் ஜல்லிக்கட்டு கிடைக்கவில்லை மெரினாவில் நடந்த போராட்டத்தால் கிடைத்தது .அதற்குள் மறந்து விட்டதா

 • Taas Vyas - ,

  மேலூர் மூர்த்தியா-இவன் எம் எல் ஏவா இருக்றப்பவே ஏகப்பட்ட சுரண்டல் சொத்து அபகரிப்பு பார்ட்டி, இதுல அமைச்சனா-அப்ப அடுத்த RPRஇவன் தான்.

Advertisement