dinamalar telegram
Advertisement

சுற்றித்திரியும் நாய்கள்; பல்லடம் பொதுமக்கள் பீதி

Share
Tamil News
பல்லடம்:பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தெரு நாய்கள் அணிவகுப்பு நடத்தி வருவது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வார்டுகளில், தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்லடம் அரசு மருத்துவமனை, மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், சராசரியாக, தினசரி, 10 பேர் வீதம் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தெரு நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வீதியிலும், பத்துக்கும் குறையாமல் தெரு நாய்கள் உள்ளன. இவை அவ்வப்போது கூட்டமாக அணிவகுத்தபடி, வீதிகளில் உலா வருகின்றன.இவ்வாறு வரும் நாய்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டு கொள்வதுடன், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. வீதிகளில் விளையாடும் சிறுவர்கள், கடைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் நாய்களின் அச்சுறுத்தலால் பீதி அடைகின்றனர். நகராட்சி நிர்வாகத்தில் கேட்டால், நாய்களை ஒன்றும் செய்ய இயலாது என்கின்றனர்.இவ்வாறு எனில், மனிதர்களின் உயிருக்கு மதிப்பில்லையா? பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.பல்லடம் நகராட்சியினர் கூறுகையில், 'தெரு நாய்களை பிடித்துச் செல்லவோ, அல்லது கொல்லவோ அனுமதி கிடையாது. இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்,' என்று 'ரெடிமேட்' பதிலை கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement